ஆவணி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2025 01:08
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று ஆவணி அமாவாசையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு ராமேஸ்வரம் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதனையடுத்து கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பயபுக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.