சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2025 01:08
சோழவந்தான்; சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் ஆக.16 ல் கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கி பாலகிருஷ்ணன் தொட்டில் வைபவம், உறியடி, வழுக்குமரம் ஏறுதல் நடந்தது. நேற்று (ஆக.21) சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணர், ருக்மணி, சத்தியபாமா விற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மூலநாத சுவாமி கோயில் கோட்டை விநாயகர் சன்னதியில் இருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. மோகன் பட்டாச்சாரியார் திருமண சடங்குகளை நடத்தினார். மாப்பிள்ளை வீட்டாராக பாலாஜி பட்டரும், பெண் வீட்டாராக அர்ச்சகர் கிருஷ்ண ஹரியும் இருந்தனர். உபயதாரர்கள் ராமகிருஷ்ணன், ராமன், ஆலடி ஏற்பாடுகளைச் செய்தனர். கோயில் சேவகர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.