ஐயப்பன் கோவிலில் உலக நலன் வேண்டி 108 சிவலிங்க பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2025 12:08
வடவள்ளி; கல்வீரம்பாளையத்தில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக நலன் வேண்டி, 108 சிவலிங்க பூஜை நடந்தது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் உலக நலன் வேண்டி, 108 சிவலிங்க பூஜை நேற்று கல்வீரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சதன் தர்மாலயத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, நாராயண குருசாமி தலைமை வகித்தார். இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களின் கைகளாலே, சிவலிங்கத்திற்கு ருத்ராபிஷேக வழிபாடு செய்தனர். தொடர்ந்து, திருவாசகம் முற்றோதல், 108 சிவபூஜை, பாலபிஷேகம் நடந்தது. இதற்காக ஏற்பாடுகளை சுரேஷ், மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்