பெரம்பலூர் சங்குபேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 10:08
பெரம்பலூர்; பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் இத்திரு கோயிலில் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். அமாவாசையையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.மாதம் தோறும் வரும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.