Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... குன்றத்தூரில் குவிந்த பக்தர்கள்; கொட்டும் மழையில் நடந்த அம்மன் ஊஞ்சல் சேவை குன்றத்தூரில் குவிந்த பக்தர்கள்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பகதர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பகதர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2025
12:08

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான  ஆவணி திருவிழா கடந்த14 ம்-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில்  நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்கச் சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8-ம்திருவிழா அன்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான  தேரோட்டம் பத்தாம் திருநாளான இன்று  நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 5 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் சுவாமி குமர விடங்க பெருமான் வள்ளி தெய்வானை  அம்பாளுடன் தேரில் எழுந்தருள  தேரோட்டம் தொடங்கியது. முதலில்  விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.  இந்த தேரானது ரதவீதி நான்கிலும் பவனி வந்து  நிறைவடைந்ததும் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிறைவடைந்ததும்  வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் கோவில் நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar