ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அடிப்படை வசதிகள்; முதல்வர் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 12:08
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வதற்கான பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி ரூ.7.85 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுதல், ரூ 2.70 கோடி மதிப்பில் ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் இரவு நேரங்களில் ஒளிரூட்டும் வகையில் மின்விளக்குகள் பொருத்தும்பணி, ரூ. 1.69 கோடி மதிப்பில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் சுகாதார வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை நேற்று காலை 11:00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோயிலில் நடந்த விழாவில் நகராட்சி தலைவர் ரவிகண்ணன், துணைத் தலைவர் செல்வமணி, அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், செயல அலுவலர் சக்கரையம்மாள், கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், முத்துப்பட்டர், பிரபு பட்டர், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகர் கோபி மற்றும் அறநிலையதுறை ஊழியர்கள் பங்கேற்றனர்.