திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆவணி சனி சிறப்பு பூஜை; எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 04:08
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவானை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி எள் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் கோவிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று ஆவணி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை, மஞ்சள்,பால்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும், வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனையும் நடைபெற்றது.அதிகாலை முதல் வரும் பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நளன்கலி தீர்த்த விநாயகரை வழிபட்டு, பின்னர் எள் தீபமேற்றி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.