கோலார் மாவட்டம், மூல்பாகல் தாலுகாவின் குருடுமலே என்ற கிராமத்தில் குருடுமலே கணபதி கோவில் அமைந்துள்ளது. இது சோழர்கள் காலதை்தில் கடட்டப்பட்டதாகும். இக்கோவிலில் 13 அடி உயரமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள விநாயகர் சிலை, மும்மூத்திகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம். ஸ்ரீராமனும், கிருஷ்ணனும் இங்கு குடிகொண்டுள்ள விநாயகரை பூஜித்ததாக நம்பப்படுகிறது. அன்றைய தினம் கர்நாகா மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவர்.
தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை; மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.