மாண்டியா நகரின், சங்கர நகரில் உள்ள பலமுரி விநாயகர் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். இங்கு குடிகொண்டுள்ள விநாயகருக்கு, ‛புராண கணேசா’ என்ற பெயர் உள்ளது.
இந்த கோவிலில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதிகாலையில் இருந்தே, பூஜைகள், அபிஷேகங்களை காண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பர். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகள், ரவா லட்டுகள் செய்து பிரசாதமாக விநியோகிப்பர்.