உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், இடகுஞ்சிபட்டணாவில், சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும், கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 1,500 ஆண்டுகள் புரானமானது. இங்கு குடிகொண்டுள்ள விநாயகர் நின்றபடி அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் தேவர்கள் முனிவர்கள் தவம் செய்தார்களாம்.
இதனால் மனம் மகிழ்ந்த விநாயகர், இதே இடத்தில் குடிகொண்டதாக ஐதீகம். கோவிலில் மற்றொரு சிறப்பும் உள்ளது. வீடு கட்டுவது, திருமணம் உட்பட தங்களின் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை தெரிந்து கொள்ள சீட்டு எழுதி, விநாயகரின் வலது, இடது கால்கள் மீது வைக்க வேண்டும். வலது புறத்தில் உள்ள சீட்டு கீழே விழுந்தால் நிறைவேறும்; இடது புறத்தில் இருந்து விழுந்தால் நடக்காது என தெரிந்து கொள்ளலாம்.