ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவில் பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் 1500 ஆண்டு முதல் 2000 ஆண்டுகள் பழமையானது. கங்கர்கள் அல்லது ஹொய்சாளர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என, வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது கர்நாடகாவின் பழமையான கோவில்களில் ஒன்று.
கோவில் பசுமையான இயற்கை சூழல் மற்றும் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளதால், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விநாயகர் உற்சவம், மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.