சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் நந்திமலை அருகில் கண் சிருஷ்டி கணபதி கோவில் அமைந்துள்ளத. இக்கோவில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கண் திருஷ்டியால் அவதிபடுவோர், இங்கு வந்து கணபதியை தரிசனம் செய்தால், திருஷ்டி விலகும் என்பது ஐதீகம். எனவே, கணபதிக்கு இந்த பெயர் வந்தது. பலரும் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து, கணபதியை தரிசிக்க வைக்கின்றனர். அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளன்று கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.