பல்லாரி மாவட்டம், ஹொஸ்பேட்டில் உள்ள ஹம்பியில். சசிவிலகு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையானதாகும். இங்குள்ள விநாயகர் சிலை ஒரே பாறைக்கல்லால் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. ஹம்பிக்கு வரும் சுற்றுலா பயணியர், இநத விநாயகரை தரிசிக்க மறப்பது இல்லை.
பக்தர்கள் வேண்டும் வரம் அளிக்கும் கோவிலாகும். திருமணம் தடைப்பட்டவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவோர், குழந்தை இல்லாத தம்பதியர், வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிப்போர் இங்கு வந்து, விநாயகரை மனமுருகி வேண்டினால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இக்கோவில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.