சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுக்காவில் கமண்டல கணபதி கோவில் உள்ளது. கொப்பா பஸ் நிலையத்தில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள குளத்தில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றுவதே இல்லை. இந்த தீர்த்த குளத்தில் நீராடினால், சனி தோஷம் நீங்கும்.
சிறார்களுக்கு நீரை குடிக்க வைத்தால் கல்வியில் சிறந்து விளங்குவார். நினைவு சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். தாமரை வடிவில் குளம் அமைந்துள்ளதால், கமல தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர். இங்கு குடிகொண்டுள்ள கணபதிக்கு கமண்டல கணபதி என, பெயர் வந்தது.
தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை