கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2025 11:08
கோவை ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை. அபிஷேகம் நடந்தது.இதில் செந்தூர காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார் இந்த நிகழ்வையொட்டி அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. நிறைவாக தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் உச்சிகால பூஜை அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மதியம் 2.30 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு உற்சவர் விநாயகர் மூஷிக வாகனம்,மயில் வாகனத்தில் விநாயகரும், மயில்வாகனத்தில் முருகர் புறப்பாடும் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு உற்சவர் விநாயகர் தங்கரதத்தில் உலா வருவார். அதனை தொடர்ந்து இரவு 9-00 மணி அளவில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.