திருச்சி; திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில், இறைவன் பிச்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அகற்றி அருள்புரிந்த திருத்தலமாகும்.
தேவார பாடல்பெற்ற இந்த திருத்தலத்தில் கும்பாபிஷேக திருப்பணி கைங்கரியங்கள் யாவும் நிறைவுபெற்று, கடந்த 24ஆம் தேதி அன்று விநாயகர் பூஜை, அனுக்ஜை மற்றும் வாஸ்துசாந்தி பூஜைகள் நடைபெற்று, இன்றையதினம் புனிதநீர் எடுத்துவரும் வைபவம் நடைபெற்றது. புண்ணிய நதியாம், புனித காவிரி ஆற்றில்இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் யானையின் மீதும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் தங்களது தலையில் தீர்த்தகுடங்களை சுமந்து கோவிலுக்கு வந்தனர். அதனைத்தொடர்ந்து ரக்ஷாபந்தனம் நடைபெற்று மாலை யாகசாலை பிரவேசமும், அதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. வருகிற 29ம் தேதி நான்காம் காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று காலை 9.30 - 10:30 மணிக்குள் அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.