Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ... குருவாயூரில் குருவாயூரில் "இல்லம் நிறை பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரகோசமங்கையில் அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்
எழுத்தின் அளவு:
 உத்திரகோசமங்கையில் அழிந்து வரும் மரகத ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்

பதிவு செய்த நாள்

29 ஆக
2025
08:08

சென்னை; ‘புகழ்பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் உள்ள 17ம் நுாற்றாண்டு விஜயரகுநாத சேதுபதி காலத்து மரகத ஓவியங்கள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும்’ என, வரைகலை பயிற்சிக்கு சென்ற சென்னை அரசு கவின் கலை கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேராசிரியர்கள் கு.கவிமணி, பாண்டி ஆகியோர் தலைமையில், சென்னை அரசு கவின் கலைக் கல்லுாரி மாணவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில், மூன்று நாள் வரைகலை பயிற்சிக்கு சென்றனர். பயிற்சி கோவிலில் உள்ள சிற்பங்களின் நுணுக்கங்கள், அளவீடுகள், வடிவமைப்பு முறைகள், கட்டடக்கலை அளவீடுகளை கண்டறிந்து, ஆய்வு செய்து தகவல் சேகரித்தனர். அதேபோல், நாகக்கன்னி சிற்பம், அழகிய மரக்கதவுகள், சிற்ப துாண்கள், கல் கருட பகவான், மரச்சிற்பம் உள்ளிட்ட சிற்பங்களை வண்ண ஓவியங்களாகவும், கோட்டோவியங்களாகவும் வரைந்து, வரைகலை பயிற்சி மேற்கொண்டனர்.

ஆய்வு குறித்து, அவர்கள் கூறியதாவது: உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலில், சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, இரண்டு ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் நடந்தன. ஆனால், அக்கோவிலில் உள்ள சிறப்பு வாய்ந்த மரகத ஓவியங்கள் செப்பனிடப்படவில்லை. இக்கோவிலில் உள்ள மூலவர் நடராஜர், பச்சை மரகதக் கல்லில் எழுந்தருளியுள்ளார். இக்கோவில் உட்புறச் சுவர்கள் முழுதும் வண்ண சுவர் ஓவியங்கள் இருந்துள்ளன. சமூகத்தின் சொத்து ஆனால், அவை பராமரிப்பின்றி அழிந்து, தற்போது மேல்கூரையில் மட்டும் எஞ்சியுள்ளன. இவை, 17ம் நுாற்றாண்டு விஜய ரகுநாத சேதுபதி காலத்து மரகத ஓவியங்களாகும். எஞ்சியுள்ள ஓவியங்களும் வண்ண தீட்டலில் தனிச் சிறப்பு பெற்றவை.

இந்த சுவர் ஓவியங்களில் பயன்படுத்தியுள்ள பச்சை வண்ணம், மரகத தன்மையை வெளிப் படுத்துகிறது. தமிழகத்தில் வேறு எந்த சுவர் ஓவியங்களிலும், இந்த பச்சை வண்ணம் காணப்படவில்லை. எனவே, வண்ணம் மற்றும் ஓவிய நுட்ப வகைகளில், மரகத நடராஜர் கோவில் சுவர் ஓவியங்கள், தமிழகத்தின் அறிவியல், பண்பாடு அறிவு சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும். ஓவியங்கள் இடம்பெற்ற சுவர்களில், மின்சார வேலைப்பாடுகள் நடந்துள்ளன; அவை களையப்பட வேண்டும். மேலும், இந்த ஓவியங்களை புத்தகங்களாக ஆவணப்படுத்த வேண்டும். ஓவியங்களை வீடியோ பதிவு செய்து, அதன் சிறப்புகள் குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விளக்க வேண்டும். அதேபோல், ராமனின் தந்தை தசரத மஹாராஜா பூஜித்ததாகக் கூறப்படும், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் சிற்பங்கள், வில், அம்புடன் கூடிய சிறப்பு வாய்ந்ததாக உள்ளன. சயன ராமன் இவை, ராமனுக்கு வேடர்கள் பாதுகாப்பு அளித்ததாக அமைந்துள்ளன. இதுவரை யாரும் இதை குறிப்பிடவில்லை. இந்த ஆய்வின் வாயிலாக, முதன்முறையாக நாங்கள் உறுதி செய்கிறோம். வரலாற்றுடன் தொடர்புடைய கோவிலாக கருதப்படும் இங்கு, சிறப்பு வாய்ந்த சயன ராமன் சன்னிதி உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மரபு வழியில், கட்டுமானத்தை புனரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar