திண்டுக்கல் சீலப்பாடியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிேஷகம் நடந்தது.இதையொட்டி கோயிலில் குரு பூஜை, கோபுர கலச ஸ்தாபிதம், சக்தி கொடி ஏற்றுதல், வேள்வி பூஜை.அஷ்ட பந்தன மருந்து சார்த்துதல் நடந்தது. தெடார்ந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜையுடன் காலை 8:15 மணி மணிக்கு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் ஆன்மிக இயக்கத்துணைத்தலைவர் மருவூர் சின்னவர் அம்மா தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம், மாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு திரை இசை நிகழ்ச்சி நடந்தது.
பழநி எம்.எம்.ஏ., செந்தில்குமார், நாகா மில் கமலக்கண்ணன், தொழில் அதிபர்கள், செவ்வாடை தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சீலப்பாடி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தலைவர் டாக்டர் செல்லமுத்தையா செய்திருந்தார்.