அவிநாசி, சேவூர் ரோடு, முத்தம்மாள் நகரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, ப்ராயசித்த அபிஷேகம், அதிவாச கிரியைகள், விமான கலச ஸ்தாபனம் நடந்தது. இரவு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், பிரதிஷ்டை நடைபெற்றது. விழாவில், இன்று காலை, 6:00 மணிக்கு விமானம் மற்றும் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.