விருதுநகர்: விருதுநகர் மீசலுார் ஷீரடி சாய்பாபா மந்திரில் வருடாபிஷேக விழா நடந்தது. காலை கணபதி பூஜை, சுதர்சனம், லெட்சுமி, மகாவிஷ்ணு ஹோமங்கள் நடந்தன.
காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், 108 நாமாவளி வாசித்தல் நடந்தது. மஹா தீபாராதனையும், கூட்டு பிரார்த்தனையும் அதை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை சாய்பாபா மந்திர் நிர்வாகிகள் செய்தனர்.