பதிவு செய்த நாள்
30
ஆக
2025
11:08
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறையில் உள்ள கோவில்களில் நேற்று சஷ்டி வழிபாடு நடந்தது.
* பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு வழிபாடு நடந்தது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது.
* கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் நேற்று சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
* எஸ்.எம்.பி., நகரில் உள்ள சோற்றுத்துறைநாதர் கோவில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில், முருகப்பெருமானுக்கு சஷ்டி பூஜைகள் நடந்தது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணி மாத சஷ்டி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின், 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகனை வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.