ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில் ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
தெற்கு வெங்காநல்லூரில் பழமையான சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மூல திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆக.,29ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி மாலை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
மூன்றாம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சிதம்பரேஸ்வரர் பிரியா விடை உடன் ராஜ அலங்காரத்திலும் சிவகாமி அம்பாள் மனக்கோலத்திலும் காட்சியளித்தார். ராஜபாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.