உத்திரமேரூரில் உள்ள கைலாசநாதர் மற்றும் கேதாரிஸ்வரர் கோவில்களில் நேற்று துாய்மைப் பணி நடந்தது.
உத்திரமேரூரில் இருந்து, காஞ்சிபுரம் செல்லும் சாலையில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு, சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த, தென்கைலாய பக்தி பேரவை சார்பில், கோவிலை துாய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது. அதில், கோவில் வளாகத்தில் உள்ள செடிகள் அகற்றப்பட்டன.
பின், உபசன்னிதிகள், சுவாமி சிலைகள் மற்றும் அபிஷேக நீர் செல்லும் வழித்தடம் ஆகியவை துாய்மைப்படுத்தப்பட்டன.
அதேபோல, உத்திரமேரூர் கேதாரிஸ்வரர் கோவிலிலும் துாய்மைப்படுத்தும் பணிகள் நேற்று நடந்தன. இதில், தென்கைலாய பக்தி பேரவை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சிவனடியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.