உளுந்துார்பேட்டை: பாதுார் பூரணி பொற்கலை சமே த அய்யனார் கோவில் ஆவணி திருவிழாவையொட்டி பாரி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் பூரணி பொற்கலை சமேத அய்யனார் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடந்த 29ம் தேதி பூரணி பொற்கலை அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
அதனை தொடர்ந்து சுவாமி முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெரிய ஏரியில் பாரி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் வி ளைந்த மணிலா, கம்பு உள்ளிட்ட விளை பொருட்களை சுவாமி மீது வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொ ண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.