அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2025 11:09
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆவணி மாதம் ஏகாதசி திதி மற்றும் ஆவணி மாதம் மூன்றாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.