விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2025 12:09
விருதுநகர்; விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் ஆவணி திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விருதுநகர் மீனாட்சி ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா ஆக. 26ல் கொடியேற்றப்பட்டது. தினசரி இரவு அன்ன வாகனம், கைலாச வாகனம், நந்தி, குதிரை, சிங்கம், யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் எட்டாவது நாளான நேற்று மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று காலை 8:30 மணிக்கு நடந்தது. மீனாட்சி அம்மன், சொக்கநாதருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சொக்கநாத சுவாமி கோயில் பிரமோற்ஸவ கட்டளை செய்தது.