Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 செப்
2025
10:09

கோவை ; சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு, கொடி கம்பம் முன்பு பூக்களால் ஆன பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம் போடப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.


சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில், ஓணம் பண்டிகையையொட்டி காலை ஐயப்பசுவாமிக்கு சகல வித வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 5.00 மணிக்கு நிர்மால்யபூஜை, 7.30 க்கு சீவேலி, 9.00 மணிக்கு பந்திரடி பூஜை, 10.00 மணிக்கு உஷபூஜை நடந்தது. சுவாமிக்கு சம்பங்கி, செவ்வந்தி, துளசி ஆகியவைகளை நாரில் தொடுத்து அலங்கரிக்கப்பட்டு, சுற்றிலும் நெய் தீபங்களால் தூண்டாவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. தங்கக்கொடிமரத்தருகே துளசி மற்றும் மருகு, ரோஜா, செவ்வந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, செண்டுமல்லி, மல்லி மலர்களை கொண்டு அத்தப்பூக்கோலம் ஒன்பது வரிசைகளில் போட்டிருந்தனர். கோவில் கருவறைக்கு பின் பகுதியிலும் அத்தப்பூக்கோலம் போடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, கோவிலிலுள்ள அன்னதானக்கூடத்தில் ஓணசத்யா விருந்து பரிமாறப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar