உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பிரஹன்னாயகி சமேத அபத்சஹாயேஸ்வரர் கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி கடந்த 29ம் தேதி காலை 10:00 மணியளவில் கணபதி ஹோமம், கோ பூஜை உடன் விழா தொடங்கியது,தொடர்ந்து 31ம் தேதி மாலை 5:00 மணியளவில் கிராமம் சாந்தி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது.1ம் தேதி காலை 9:00 மணியளவில் திசா ஹோமம், சாந்தி ஹோமம், மாலை 5:00 மணியளவில் அங்குரார்பணம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து 2ம் காலை 8:00 மணியளவில் மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், பின்னாபி ஷேகம் உள்ளிட்ட ஹோமங்களும் மாலை 5:00 மணியளவில் விநாயகர் பூஜை, வர்ண பகவான் சோமகும்ப பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் காலை 9:00 மணி அளவில் விசேஷ சந்தி, விநாயக பூஜை, வருண பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று அதிகாலை 4:00 மணியளவில் பரிவார யாகம் துவக்கம், 6:00 மணியளவில் நாவக்னி யாகம், விநாயக பூஜை, வருண பூஜை, சந்திர பகவான் வழிபாடு தொடர்ந்து நான்காம் கால மண்டல பூஜை நடந்தது.காலை 9:15 மணியளவில் கலசங்கள் புறப்பாடாகி விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சான்தரிசனம் செய்தனர். கோவிலில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.