2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பின், கோயில் கட்டுமான பணிகள், முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று, 2024 ஜன 22ம் தேதி, ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. புண்ணிய பூமியாக போற்றப்படும் அயோத்தியில் அன்று முதல் அயோத்தி ராமரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் பாத்ரபாத சுக்ல பூர்ணிமா அன்று, அதாவது ஞாயிற்றுக்கிழமை, செப்., 7ம் தேதி அன்று, சந்திர கிரகணம் காரணமாக, ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திரில் தரிசனம் மதியம் 12:30 மணி வரை மட்டுமே கிடைக்கும். பின்னர் நடைஅடைக்கப்பட்டு, அதன் பிறகு, மறுநாள், திங்கட்கிழமை, செப்., 8ம் தேதி அன்று, காலை மங்கள ஆரத்திக்குப் பிறகு பக்தர்களுக்காக மந்திர் வாயில்கள் திறக்கப்படும். அதன் பின் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.