ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூாில் பல்வேறு பகுதிகளில் உள்ள கேரள மக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டனர். இதையடுத்து திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவில் மற்றும் ஊத்துக்குளி ரோடு ஸ்ரீகுருவாயூரப்பன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குருவாயூரப்பன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.