திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு நாட்கள் நடக்கிறது. தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக இந்த உத்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தினமும் காலை சதுஸ்தான அர்ச்சனம், சாத்துமறை நடக்கிறது. மாலை பெருமாள் மாடவீதி புறப்பாடும், இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறை நடைபெறும். மேலும், கோவில் வளாகத்தில் காலை 9:30 - 11:00 மணி வரையும், இரவு 7:00 - 8:30 மணி வரையும் யாகசாலை பூஜை நடைபெறும். அதன்படி இன்று சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. உற்சவர் வைத்திய வீரராகவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழா நாட்களில் உற்சவர் வீரராகவ பெருமாள், மாலை 5:30 மணிக்கு மாடவீதிகளில் உலா வருகிறார்.