துணை ஜனாதிபதி தேர்தலில் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2025 03:09
அவிநாசி; துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பா.ஜ.,வினர் சிறப்பு பூஜைகள் செய்தனர். இன்று துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தின் கொங்கு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி அவிநாசி பா.ஜ.,சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,அவிநாசியப்பர், கருணாம்பிகை மற்றும் சுந்தரமூர்த்தி நாயனருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்பு ராதாகிருஷ்ணன் பெயருக்கு அர்ச்சனை செய்து பா.ஜ.,வினர் பிரார்த்தனை செய்தனர்.