திருப்பூர் பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2025 10:09
திருப்பூர்; திருப்பூர், புஷ்பா சந்திப்பில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. திருப்பூர் புஷ்பா சந்திப்பு சிக்னல் அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் விழா 9ம் தேதி துவங்கியது. முதல் நாள் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது. 10 ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், கோபுர சிலை கண்திறப்பு, பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை, ஓடக்காடு விநாயகர் கோவிலில் இருந்து பம்பை வாத்தியத்தோடு அழைத்து வருதல் நடந்தது. ஸ்ரீ பத்ரகாளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று காலை பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.