ஒட்டன்சத்திரம்; ஜவ்வாதுபட்டி அருகே பெரியமல்லையாபுரம் ஸ்ரீவீரக்குமார்சுவாமி கோயிலில் அரோகரா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தீர்த்தக்காவடி ,முளைப்பாரி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷனம், முதற்கால யாக பூஜை, வீரக்குமார் சுவாமி பிரதிஷ்டை, கோபுர கலசம் வைத்தல் நடந்தது. நேற்று காலை மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், மூர்த்தி ஹோமங்கள், மூல மந்திர ஹோமங்கள் , கடம்புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் வீரக்குமார்சுவாமி கோயில் கலசத்தில் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.