அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2025 10:09
கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ணனின் ஜென்மாஷ்டமி விழா சிற்பபாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோகுலகிருஷ்ணரை தொட்டிலில் இடும் வைபவம் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பகவான் கோகுல கிருஷ்ணனை தொட்டிலில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.