காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 10:09
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 3:30 மணிக்கு மூலவருக்கு பால் தயிர் தேன் இளநீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் வெண் பட்டுடுத்தி வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேல வாத்தியம் முழங்க திருக்கோவில் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து திருவாராதனம் மந்திர புஷ்பம் அஷ்டோத்திரம் சேமிக்கப்பட்டு, மங்கள ஆரத்தியுடன் சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. இதில் ஸ்தலத்தார்கள், மிராசுதாரர்கள், அறங்காவலர் குழுவினர் திரு கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்