திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 04:09
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆதி ஜெகநாதப்பெருமாள், பத்மாஸனி தாயார், தெர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டும், தேவையான இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த கார்கள், டூவீலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.