முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடரமண கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2025 12:09
கரூர் :புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், கும்பாபி ேஷக பணிகள் நடக்கவுள்ளதால், நடப்பாண்டு புரட்டாசி திருவிழா, திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா மற்றும் தேர்த்திருவிழா ஆகியவை நடக்கவில்லை. இந்நிலையில், முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதல், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் மற்றும் வளாகத்தை சுற்றி போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.* நொய்யல், கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.முன்னதாக, நொய்யல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரியாற்றில் இருந்து, சீனிவாச பெருமாள் கோவிலுக்கு தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.