இறைவழிபாடால் சக்தி கிடைக்கும் சிவனடியார் மீனாட்சி தேவி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2025 12:09
திருவாடானை: ‘‘இறை வழிபாடால் சக்தி கிடைக்கும்,’’ என, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் கோவை உடுமலைபேட்டையைச் சேர்ந்த சிவனடியார் ஞானரிஷி மாதா மீனாட்சி தேவி தெரிவித்தார்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த பின் அவர் கூறியதாவது: இளைஞர்கள் தற்கொலை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். அப்போது தான் தற்கொலை எண்ணம் மாறும். இறைவழிபாட்டால் மட்டுமே நமக்கு சக்தி கிடைக்கும். தன்னம்பிக்கை ஏற்படும்.
எனவே இளைஞர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு இறைவனை வணங்குங்கள். அக்னி, நீரால் பெரும் ஆபத்துகள் உள்ளது. எனவே உலக நன்மைக்காக கோவையில் 37 மணி நேரம் இடைவிடாமல் மஹா ருத்ர வேள்வி நடத்தினேன். உலக நன்மை வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறேன் என்றார்.