Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் நவராத்திரி விழா துவக்கம் ... சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓராண்டில் ரூ.327 கோடி வருவாய்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஓராண்டில் ரூ.327 கோடி வருவாய்

பதிவு செய்த நாள்

23 செப்
2025
12:09

அயோத்தி; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், கடந்த நிதியாண்டில் 327 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இதையடுத்து, நம் நாட்டில் உள்ள பணக்கார கோவில்களின் வரிசையில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.


உ.பி.,யின் அயோத்தியில், ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் நடந்த விழாவில், பால ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் பால ராமரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், 2024 – 25ம் நிதியாண்டில் மட்டும், அயோத்தி ராமர் கோவில் 327.07 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில், நன்கொடையாக மட்டும் 157 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. உண்டியல் வருவாய், வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கு கிடைத்த வட்டி உள்ளிட்டவை இதில் அடங்கும். இதையடுத்து, நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் கோவில்களின் பட்டியலில் அயோத்தி ராமர் கோவில் இடம்பெற்றுள்ளது.


இது குறித்து ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ராமர் கோவிலுக்கு நாள்தோறும் 70,000 – 80,000 பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில், இது மூன்று மடங்காக உயரும். நடப்பு நிதியாண்டில், கடந்த மாதம் வரை, 104.96 கோடி ரூபாய் ராமர் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இதில், 31.22 கோடி ரூபாய் நன்கொடையாகவும், 20.86 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாகவும் கிடைத்துள்ளது. வருடாந்திர வருவாய் அடிப்படையில், நம் நாட்டில் உள்ள பணக்கார கோவில்களில் அயோத்தி ராமர் கோவில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar