அரும்பாக்கம்; நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, அரும்பாக்கத்தில் பிரசித்த பெற்ற பாஞ்சாலி அம்மன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்மை அம்மன், நேற்று மாலை, லலிதா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் காட்சியளித்தார். நவராத்திரியை முன்னிட்டு, அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ விஷ்ணுதுர்கை அம்மனுக்கு, 24ம் ஆண்டு நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு அபிஷேகமும், மாலை லலிதா திரிபுரசுந்திரி அலங்காரத்தில் சாமி எழுந்தருளி, பக்கதர்களுக்கு அருள்பலித்தார். இன்று, ஸ்ரீ லட்சுமி உற்வசத்தில் காட்சியளிக்க உள்ளார். தொடர்ந்து அக்.,2ம் தேதி வரை உற்வசம் நடக்கிறது.