சிவகாசி; சிவகாசி தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா ) சார்பில் அதன் அலுவலகத்தில் வெற்றி விநாயகர் பூஜை நடந்தது. பட்டாசு தொழிலை விபத்து ஏற்படாமல் காப்பாற்றுவதற்கும், விபத்தில் காலமான ஆன்மாக்கள் சாந்தமடையவும், சாபங்கள் ஏதாவது இருந்தால் ஒட்டுமொத்த தொழிலுக்கும் விமோசனம் கிடைப்பதற்கும் பூஜை நடத்தப்பட்டது. மங்கள இசையுடன் துவங்கி விக்னேஸ்வர பூஜை, புண்யாக வசனம், பஞ்ச கவ்யம், வேதிகா அர்ச்சனை, வேத பாராயணம் திருமுறை பாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகாபிஷேகம், விமான மூலஸ்தான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. டான்பாமா தலைவர் கணேசன், செயலாளர் சங்கர், பொருளாளர் சீனிவாசன், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன், செயலாளர் இளங்கோவன், நிர்வாகிகள் உறுப்பினர்கள், மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.