சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கோவில்களில் ஆபரணங்கள் வைத்து சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2025 11:10
காளஹஸ்தி; திருப்பதி தசரா நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆயுத பூஜை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரின் திருக்கல்யாண மண்டபம் அருகில் ஆயுத பூஜை செய்யப்பட்டது. நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் கோயில் வேதப் பண்டிதர்கள் சாமி அம்மையார் மற்றும் பரிவார தெய்வங்களின் அலங்கார உடமைகள், பூஜைக்குப் பயன்படுத்தப்படும் ( பூஜை சாமான்கள்) மற்றும் ஆபரணங்களை வைத்து பூஜை செய்தனர். நித்ய கல்யாண மண்டபத்தில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, சனீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி மற்றும் சாமி அம்மையார்களின் கவசங்கள் வைத்து கோயிலின் அபிஷேக குருக்கள் சுரேஷ் குருக்கள் சாஸ்திர முறைப்படி பூஜைகள் மேற்கொண்டு தீம் தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.