புரட்டாசி சனி; பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2025 10:10
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனுமனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் செந்தூர காப்பு அலங்காரத்துடன் கம்பீரமாய் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், புரட்டாசி மாதம் துவாதசி திதி மற்றும் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.