Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் சிறப்பு வழிபாடு கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகாய தாமரை படர்ந்து மூடப்பட்ட திருநீர்மலை ரங்கநாதர் கோவில் குளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆகாய தாமரை படர்ந்து மூடப்பட்ட திருநீர்மலை ரங்கநாதர் கோவில் குளம்

பதிவு செய்த நாள்

08 அக்
2025
11:10

திருநீர்மலை; திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளம், ஆகாய தாமரையால் மூடப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதாக, பக்தர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பழமைவாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என, நான்கு கோலங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார். பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். கோவில் அடிவாரத்தில் குளம் உள்ளது. இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், சீரழிந்து விட்டது. உட்பகுதியிலும், குளத்தை சுற்றிலும் குப்பை கழிவுகள் தேங்கி, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. குளத்தின் மேற்பகுதி, மது அருந்தும் இடமாக மாறிவிட்டது. ஆகாய தாமரை வளர்ந்து, குளத்தையே மூடிவிட்டது. பார்ப்பதற்கு கோவில் குளமா அல்லது ஆகாய தாமரையால் மூடப்பட்ட குட்டையா என எண்ணும் அளவிற்கு, மோசமான நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தின் அருகே செல்லவே தயங்குகின்றனர். பல மாதங்களாக இப்பிரச்னை நீடித்தும், குளத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க, கோவில் நிர்வாகம் முயற்சி கூட செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விஷயத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு, குளத்தை நேரில் ஆய்வு செய்து, ஆகாய தாமரையை அகற்றி, சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar