‘பெருமாளே! தொன்மைக்கெல்லாம் தொன்மையாகவும், மூலத்துக்கெல்லாம் மூலமாகவும் இருப்பவன் நீ. ஒளியைத் தரும் செல்வர்களான சூரிய, சந்திரனுக்கு ஒளி தரும் பேரொளி நீ. உண்மையில் அதுவெல்லாம் நீயே. வேதம், வேள்வி, வானம், பூமியாக இருப்பவனும் நீ. இப்படி அனைத்துக்கும் ஆதியாக இருக்கும் நீ இடையர் குலத்தில் கிருஷ்ணராக அவதரித்து நீ செய்த மாயச் செயல்களை என்னவென்று சொல்வது’ என்கிறார் திருமழிசை ஆழ்வார்.