கர்நாடக மாநிலம் கட்டீல் துர்க்கா தேவி கோயிலில் சந்தனம், குங்கமத்துடன் பாக்கு மரத்தின் பூவும் பிரசாதமாக தரப்படுகிறது. இது துளசி இலை பிரசாதத்திற்கு இணையானது. இங்கு வரும் பக்தர்கள் துர்க்காதேவிக்கு இளநீர் அபிஷேகம், புஷ்ப பூஜை, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். இந்தக் கோயிலின் முக்கிய விசேஷம் யக்ஷகானம். விமரிசையாக நடைபெறும் இந்த வைபவத்தை துர்க்கா தேவியே கண்டு மகிழ்வதாக ஐதிகம். இந்தக் கோயிலுக்கு அருகில் பெரிய பாறை ஒன்று உள்ளது. அருணாசுரன் என்ற அசுரன் வாளால் பிளந்த பாறை இது. இதிலிருந்தே அம்பிகை வெளிப்பட்டாள் என்பதால் இந்தப் பாறைக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.