தஞ்சாவூர் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆளூயர பைரவரை தரிசிக்கலாம். மற்ற கோயில்களில் பைரவரை சுமார் இரண்டடி உயரத்தில் தான் காணலாம். ஆனால் இக்கோயிலில் 5 அடி உயர பைரவமூர்த்தியை தரிசிக்க முடியும். அஷ்டமி தினங்களில் இந்தப் பெரிய பைரவரை தரிசித்து வடைமாலை சாற்றி வழிபட்டு வர வியாபார விருத்தி உண்டாகி, செல்வம் பெருகுமாம்.