தஞ்சாவூர் பேராவூரணியிலிருந்து 6 கி.மீ தொலைவில் பெருமகளூர் அமைந்துள்ளது. ஓட்டு வீடு போன்று வித்தியாசமான அமைப்புடன் உள்ள இங்கு பாலசுப்ரமணியசுவாமி அருள்பாலிக்கிறார். கருவறையில் மூலவர் நின்ற கோலத்தில் வேலுடன் காட்சி தருகிறார். பதினாறு பேறுகளையும் அருளும் விதமாக பாலசுப்ரமணியர் அருள்பாலிப்பது சிறப்பு.