புதுக்கோட்டை அறந்தாங்கி மணமேல் குடியிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ளது வடக்கு புதுக்குடி கடற்கரை கிராமம். கடற்கரையின் ஓரத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலைப் போல் வள்ளி தெய்வானை சமேதராக அருள் பாலிக்கிறார் சிவசுப்பிரமணியர். இத்தலத்தைப் பற்றி அறிந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இங்கு வந்து இவரை வழிபட்டு இந்த கிராமத்திற்கு சின்ன திருச்செந்தூர் என்று பெயரிட்டார். மணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பெறாத கணவன்- மனைவி இருவரும் மாதக் கார்த்திகைக்கு ஏழு நாட்கள் முன்னதாக வீட்டில் விரதமிருந்து கார்த்திகை நாளன்று இங்கு வந்து இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் உடனே குழந்தைப் பேற்றை அடையலாம்.